• September 12, 2024

மாணவர்களுக்கு உற்சாக செய்தி மாணவர்கள் தங்கும் விடுதிக்கு ஜிஎஸ்டி வரிகளில் இருந்து விலக்கு..!! மத்திய அமைச்சர் அறிவிப்பு..!!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற முடிந்துள்ளது, இந்த கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் பங்கு பெற்றுக் கொண்டனர்.

அப்பொழுது இந்த கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கூறியது “எஃகு, அலுமினியம், இரும்பு உள்ளிட்ட பால் கேன்களுக்கு ஒரே சீரான 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும், அட்டை பெட்டிக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜிஎஸ்டி வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மாணவர்கள் 90 நாட்கள் தங்க வேண்டும், மாத வாடகை 20 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது.

ரயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை, பொருள்கள் வைக்கும் அறை, பயணிகள் பயன்படுத்தும் மின்சார வாகனங்களுக்கான சேவை, ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் உள்ளிட்டவருக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும்”, என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Read Previous

கள்ளக்குறிச்சி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை அமோகம்..!! இதுவரை 808 பேர் அதிரடி கைது..!!

Read Next

50 வயதிலும் அழகு குறையாத தேவயானி..!! ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் மகள்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular