
மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி ஸ்காலர்ஷிப் என்கின்ற திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதம்தோறும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதாவது இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதம் ரூ.3000 மற்றும் ரூ.2500 வழங்கப்பட்டு வருகின்றது. இதனை பெற மாணவர்கள் பிரதான் மந்திரி ஸ்காலர்ஷிப் திட்டம் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும், இந்த திட்டத்தின் மூலம் நாடோடி பழங்குடியினர், பட்டியலிடப்படாத சாதி, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பை சார்ந்த அனைத்து மாணவர்களும் பயன்பெற முடியும்,
அதேபோல் பிரதான் மந்திரி யாஷஸ்வி ஸ்காலர்ஷிப் திட்டம் ஒன்பதாம் மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குகின்றது ஒவ்வொரு திட்டத்திற்கும் தனிப்பட்ட தகுதி தேவைப்படுகிறது. இதில் பிரதான் மந்திரி ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மெரிட் பட்டியலை தீர்மானிக்க எழுந்து தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் நிதிநிலை அடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு பிரதான் மந்திரி யாஷஸ்வி ஸ்காலர்ஷிப் திட்டம் 2024 திட்டத்தின் கீழ் ஆண்டு நிதியுதவி ரூ.75 ஆயிரம் முதல் 1.25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.