
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், ‘HDFC வங்கி வழங்கும் கல்வி உதவி தொகை’ குறித்து இந்த பதிவில் விரிவாக காண்போம். அதாவது, பொருளாதார நிலையில் பின்தங்கிய, படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், “இத்திட்டத்தின் மூலம் பி.ஏ., பி.காம்., மற்றும் பி.எஸ்.சி போன்ற பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ. 30,000 கல்வி உதவித்தொகை” வழங்கப்படுகிறது. அதேபோல், “பி.டெக்., பி.ஆர்க்., எம்.பி.பி.எஸ் மற்றும் நர்சிங் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ. 50,000 கல்வி உதவித்தொகை” வழங்கப்படுகிறது. குறிப்பாக, மாணவர்கள் முந்தைய தேர்வில் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். அதன்படி, தகுதியுள்ள மாணவர்கள் ‘Buddy4Study’ என்ற HDFC வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று இந்த கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.