மாணவர்களே உஷார்..!! இலவச லேப்டாப் வாங்குவதாக மோசடி..!! வாட்ஸப்பில் வைரலாகும் லிங்க்.!!

இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கிய நாளிலிருந்து அதனை முறைகேடாக பயன்படுத்தும் நபர்கள் தனிப்பட்ட நபர்களின் தரவுகளை திருடி வரும் செயல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இவற்றிலிருந்து தப்பிக்கவும் தவிர்க்கவும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் மொத்தமாக மோசடிகளை தவிர்க்க முடிவதில்லை.

அதனை உறுதி செய்வதை போலவே அரசு அறிவிப்பு போல் பகல் மோசடி சம்பவங்களும் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் படித்து வரும் மாணவர்களை குறி வைத்து அவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக லிங்க் ஒன்று வைரல் ஆகி வருகிறது அந்த தகவலில்

“மாணவர்களின் லேப்டாப் திட்டம் 2023க்கான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. நிதிக் காரணங்களால் சொந்தமாக மடிக்கணினி வாங்கும் நிலையில் இல்லாத மற்றும் அவர்களின் கல்வி நிலையில் லேப்டாப் தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் திறக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் 960,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் கற்றலை மேம்படுத்த இலவச லேப்டாப் வழங்கப்படும். விண்ணப்பம் தொடங்கப்பட்டு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் மடிக்கணினிகளைப் பெறத் தொடங்கியுள்ளனர். இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும் https://fnx62.top/?xt=1” என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது மாநில அரசோ, தனியார் நிறுவனமோ இவ்வாறான அறிவிப்பை வெளியிடவில்லை மோசடியாளர்களின் செயல்பாடுகளை கண்டறிந்து அதனை தவிர்க்க வேண்டிய சூழலில் நாம் உள்ளோம். ஆகையால் இது போன்ற லிங்குகளை பார்த்தால் அதில் பதிவு செய்ய முயற்சிக்க வேண்டாம் மற்றும் யாருக்கும் பகிர வேண்டாம் என்று அரசு எச்சரித்துள்ளது.

Read Previous

பள்ளிக்கு முன்பு விளையாடிய குழந்தைகள் கடத்தல் முயற்சி..!! விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்..!!

Read Next

தாயை நிர்வாணமாக்கி, மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்..!! உள்துறை அமைச்சர் ஆறுதல்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular