
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக புனிதா என்பவர் பணியாற்றி வருகிறார்…
இப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர், இந்த நிலையில் அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேஷ் வர்மா,நித்திஷ், கவின், ரோஷன், சஸ்மிதா ஆகியோர் நான்காம் வகுப்பு படிக்கின்றனர், அரசு பள்ளி மாணவர்கள் வாயில் டேப் தலைமையாசிரியர் புனிதா இந்த ஐந்து மாணவர்கள் வாயில் செல்லோ டேப்பை ஒட்டி இரண்டு மணி நேரம் வகுப்பறையில் உட்கார வைத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் போட்டோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதுகுறித்து பெற்றோர் தரப்பில் கூறுகையில் வகுப்பில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் இருக்க தலைமை ஆசிரியர் புனிதா மாணவர்கள் வாயில் பெரிய செல்லோடைப்பை ஒட்டியுளளார், கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி இதேபோல் ஒரு மாணவி உள்பட ஐந்து மாணவர்கள் வாயில் டேப் ஒட்டி மதிய சாப்பாட்டு நேரம் வரும்வரை உட்கார வைத்துள்ளார், இதை தாங்க முடியாத அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் இது தப்புன்னு சொல்லியும் கேட்காமல் தலைமை ஆசிரியர் இதை செய்ததாக தெரிகிறது, மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட போட்டோவும் எங்களுக்கு கிடைத்தது, இது குறித்து நாங்கள் தலைமை ஆசிரியரிடம் கேட்பதற்கு முறையான பதில் சொல்லவில்லை இனிமேல் இதுபோல் நடக்காது எனவும் சொல்லவில்லை இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இதனால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார். இது குறித்து தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் கூறியது ஆசிரியர் வகுப்பில் இல்லாததால் ஒரு மாணவனை வகுப்பை கவனித்துக் கொண்டுள்ளார் அந்த மாணவர் தன் வகுப்பறையில் பேசிய மாணவர்களின் வாயில் டேப் ஒட்டியுள்ளான் ஆசிரியர்கள் ஒட்டவில்லை என தெரிகிறது, இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வட்டார கல்வி அலுவலருக்கு உத்திராவிடப்பட்டுள்ளது என்றார்….!!