உத்திர பிரதேச மாநிலத்தில் (கற்றுப் பார்) திட்டம் அரசு பள்ளிகளில் புதிய நோக்கில் அமலுக்கு வந்துள்ளது, மாணவர்களுக்கு கல்வி கற்கும் தருணங்களில் தேநீர் போடுவது பக்கோடா சுடுவது மற்றும் பஞ்சர் ஒட்டுவதும் பழரசம் செய்வதும் பாடசாலையில் அமல்படுத்தியுள்ளார்கள்.
மாணவர்கள் படிக்கும் நேரத்திலேயே தன் அறிவைக் கொண்டு தொழில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 26 பள்ளிகளில் இதனை நடைமுறைப்படுத்தி கற்று தந்து அவர்களின் அறிவை உயர்த்தி ஒரு வழிகாட்டலாக இருக்க உத்திர பிரதேச மாநிலம் இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது, இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியும் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமும் அவர்களிடம் தெரிந்தது.