மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்..!! பெற்றோர்கள் அதிர்ச்சி..!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியின் 17 வயதுடைய மகள் தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகின்றார்.

கடந்த 29 ஆம் தேதி இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகள் காணவில்லை என பெற்றோர் தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தோகைமலை போலீசார் காணாமல் போன பள்ளி சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் பள்ளி சீருடையில் மாணவி கழுத்தில் தாலி கட்டிய நிலையில் சக மாணவன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் நேற்று தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் முற்றுகை செய்து பள்ளி வகுப்பறையில் திருமணம் செய்த மாணவன் மீதும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சக மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பள்ளி சிறுமியின் உறவினர்கள் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றனர்.

பள்ளி வகுப்பறையில் மாணவி தாலி கட்டிய நிலையில், சக பள்ளி மாணவனுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதால் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Read Previous

கணவன் மனைவிக்குள் அன்பு என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் உள்ளதா?..

Read Next

வேலை வாங்கித் தருவதாக ரூ. 14,15,000 மோசடி, 3 பேர் மீது வழக்கு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular