
மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற பேராசிரியர் கைது..!! போலீசார் விசாரணை..!!
கோயம்புத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது கல்வி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக கல்லூரி பேராசிரியர் சிவப்பிரகாசத்தின் உதவியை நாடியுள்ளார். அப்போது, தனது வீட்டிற்கு அழைத்த பேராசிரியர், மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். உடனே அங்கிருந்த குளியறைக்குள் சென்ற மாணவி, தனது லொகேஷனை தோழிகளுக்கு அனுப்பி நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே போலீசாருக்குத் தகவல் கிடைக்க சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேராசிரியரை கைது செய்தனர்.