மாணவ மாணவிகளுக்கு புதிய வங்கி கணக்கு தொடக்கம்..!! தமிழக பள்ளி கல்வித்துறை..!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்க பள்ளி கல்வித்துறை அஞ்சல் துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

தற்போது தமிழகத்தில் 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றது. தமிழக மாநில பள்ளி திட்டத்தின் கீழ் பயின்று வரும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வங்கிகளில் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட உள்ளது. இதன் வாயிலாக மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சேமிப்பு கணக்குகளை தொடங்கி தமிழ்நாடு அஞ்சல் துறையுடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்க வங்கிகளில் புதிய கணக்கை தொடக்க பல ஆவணங்கள் கேட்கப்பட்டு இழுத்தடிக்கப்பட்டன, இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போது பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்கான வங்கி கணக்கை அஞ்சலக சேமிப்பு கணக்காக தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா..? நடிகர் பிரகாஷ்ராஜ்..!!

Read Next

பத்தாண்டுக்கு பின் இந்தியாவிற்கு புதிய விடியல்..!! முதல்வர் மு க ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular