
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் பிறந்த குழந்தை முதல் இப்போதிலிருந்து சேமிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு இப்போதிலிருந்து சேமித்து வைத்தால்தான் வருங்காலத்தில் நன்றாக இருப்பார்கள் என்ற சிந்தனையில் பல சேமிப்பு திட்டங்களின் முதலீடு செய்கிறார்கள். இதற்காக அஞ்சல் அலுவலகங்களில் ஏராளமான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. பிறந்த குழந்தை முதல் 60 வயதை எட்டிய முதியவர்கள் வரை பலரும் பயனடையும் வகையில் பல திட்டங்கள் உள்ளது. அந்த வகையில் பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் ஒரு திட்டம் பற்றி பார்க்கலாம்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் வரை இந்த திட்டத்தில் இணையலாம். கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு தற்போது 8.2 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது. பெண் குழந்தை பிறந்ததும் அவர்களது ஆதார் அல்லது பிறப்பு சான்றிதழ் கொண்டு இந்த திட்டத்தில் இணையலாம். பத்து வயதை கடந்த பெண் குழந்தைகள் இந்த திட்டத்தில் இணைய முடியாது. இந்த திட்டத்தில் உங்கள் முதலீட்டிற்கான வருவாய் மிகவும் அதிகம். ஒரு வயது தொடங்கி அந்தப் பெண் குழந்தையின் 21 வயது வரை பணத்தை உங்களால் சேமிக்க முடியும்.
அதே சமயம் அந்த பெண்ணிற்கு 18 வயது நிரம்பியதும் ஒரு கணிசமான தொகையை எடுத்துக் கொள்ளவும் வழி உண்டு. உங்கள் பெண் குழந்தையின் இரண்டாவது வயதில் நீங்கள் இந்த திட்டத்தில் பணத்தை சேமிக்கிறீர்கள் என்றால் மாதம் 2000 ரூபாய் என்று வருடத்திற்கு 24 ஆயிரம் ரூபாயை சேமித்து வைத்தால் 21 ஆண்டுகளில் சுமார் மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை நீங்கள் சேமித்து இருப்பீர்கள். 21 ஆண்டுகளில் முடிவில் நீங்கள் சேமித்த பணத்திற்கு வட்டியாக மட்டும் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
அப்படி என்றால் அசுலுடன் சேர்த்து மூன்று மடங்காக 21 ஆண்டுகளின் முடிவில் சுமார் 11,50,000 உங்களுக்கு கிடைக்கும். இந்த பணம் அந்த பெண் குழந்தையின் மேற்படிப்பு மற்றும் திருமணம் போன்ற நல்ல பல விஷயங்களுக்கு பயன்படும். இந்த திட்டத்தை பொறுத்தவரை குழந்தை பிறந்த அந்த ஆண்டு சேமிப்பை தொடங்குவது மிகவும் நல்லது. எதிர்காலத்தில் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது. உங்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தை தொடர்பு கொண்டு இந்த திட்டத்தில் நீங்களும் இணையலாம்.