
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) மூலம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த 10ம் மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள தகுதியான மாணவர்கள் www.tahdco.com என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளை நிறைவு செய்யும்பட்சத்தில் ஆரம்ப கால மாத ஊதியம் என்பது ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை கிடைக்கும்.