இளம் தலைமுறையினருக்கு நல்ல முதலீடு திட்டமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் விளங்கி வருகிறது. சராசரியாக வருடத்திற்கு இந்த SIP திட்டத்தின் மூலமாக 12 சதவீதம் வருமானம் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தது இந்த திட்டத்தின் கீழ் ரூ. 100 முதல் முதலீடு செய்ய துவங்கலாம். மேலும், உதாரணமாக முதல் ஆண்டில் மாதம் ரூ. 500 முதலீடு செய்தால் அடுத்த ஆண்டில் 10 சதவீதம் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும்.
அதாவது, இரண்டாவது ஆண்டில் ரூ. 550 முதலீடு செய்ய வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் 10 சதவீதம் கூடுதலாக முதலீடு செய்து வந்தால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு 12 சதவீத வட்டியுடன் ரூபாய் 44 லட்சத்து 17 ஆயிரத்து 62 தொகை கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் கூடுதலாகவும் முதலீடு செய்து அதிக வருமானத்தை பெறலாம். எனவே, எதிர்கால தேவைக்காக சேமிக்க விரும்பும் இளம் தலைமுறையினர் இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இணைந்து பயன்பெறவும்.