நமது தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்கள் உதவி பெறும் வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நமது தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 15 தேதி தொடங்கி வைத்தார்.இத்திட்டத்திற்காக நமது தமிழக நிதியமைச்சர் வரவு,செலவு திட்டத்தில் இருந்து சுமார் 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
இத்திட்டத்தின் பயனை பெற வேண்டும் என்றால் அதற்கு ரேஷன் கார்டு என்பது மிக கட்டாயமான ஒன்றாகும்.அதற்கு ரேஷன் அட்டையை முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும்,ரேஷன் அட்டை பதிவு செய்வது என்பது மிகவும் சுலபமான ஒன்றாகும்.
ரேஷன் அட்டை பதிவு செய்யும் முறை;
நாம் இருக்கும் இடத்தில் இருந்து பதிவு செய்து கொள்ளலாம்.முதலில் தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அதிகாரபூர்வ தளமான https://www.tnpds.gov.in/ என்ற இணைய தளத்திற்கு சென்று அங்கு அதில் பயனாளர் நுழைவு என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அது மற்றொரு பக்கத்தில் தொடங்கும்.அதில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை கொடுத்து விட்டு கேப்ட்சா எழுத்துக்களை பதிவு செய்ய வேண்டும். பிறகு “பதிவு செய்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அடுத்து நீங்க பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP நம்பர் வரும் அதனை கொடுத்து அப்டேட் செய்து கொள்ளவும். பிறகு ரேஷன் கார்டு பதிவிறக்கம் செய்யும் ஆப்ஷன் இருக்கும் அதன் உள்ளே சென்று ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் சேவ் என கொடுத்தால் பிடிஎஃப் வடிவில் உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மகளிர் உதவித்தொகைக்கு பதிவு செய்வது எப்படி :
மகளிர் உரிமை தொகை பெற தேவையான ஆவணங்கள்.ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு மட்டும் வீட்டு வரி ரசீது ஆகிய ஆவணங்கள் இருந்தால் மட்டும் போதும் அவைகளை கொண்டு உங்களுக்கு அருகில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்று பதிவு செய்து மாதம் 1000 ரூபாயை பெற்றுக்கொள்ளலாம்