மத்திய அரசு ஆனது என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை சமீபத்தில் வெளியிட்டது. இத்திட்டத்தின் கீழ் பிறந்த குழந்தை முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கலாம். அதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பாதுகாவலர்/பெற்றோரின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி, NREGA வேலை அட்டை அல்லது KYCக்கான தேசிய மக்கள்தொகைப் பதிவேடு அட்டை. பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க பாதுகாவலர்/பெற்றோரின் பான் கார்டு ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக ரூ.1000/- முதலீடு செய்ய முடியும். அதிகபட்ச வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. NPS வாத்சல்யா கணக்கை தேசியமயமாக்கப்பட்ட வங்கி, PFRDA-அங்கீகரிக்கப்பட்ட PoS மற்றும் தபால் நிலையங்களில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தொடங்கலாம். 18 வயது பூர்த்தியானதும் 20 சதவீதம் கார்பஸ் வரை மட்டுமே திரும்பப் பெற முடியும். மீதமுள்ள 80 சதவீதத் தொகை அவர்கள் பெயரில் வருடாந்திர தொகையாக மாற்றப்படும். மொத்த கார்ப்பஸ் ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், முழு கார்பஸையும் திரும்பப் பெறலாம்.
குழந்தை பிறந்ததும் குழந்தையின் பெயரில் NPS வாத்சல்யா திட்டத்தில் ரூ. 5,000 மாதாந்திர பங்களிப்பைத் தொடங்கி 18 வயது வரை பங்களித்தால், ரூ. 10.80 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். பட்டியுடன் சேர்ந்து இந்த தொகை ரூ.30.09 லட்சமாக இருக்கும். மீதமுள்ள 80 சதவீத பணம் வருடாந்திர கணக்கிற்கு மாற்றப்படும். வருடாந்திர திட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட தொகையை நீங்கள் உங்கள் 60வது வயதில் தான் பெற்றுக் கொள்ள முடியும். 60 வயதில் நீங்கள் இந்தத் தொகை ரூ.3.54 கோடியாக உயர்ந்திருக்கும். எனவே பெற்றோர்கள் தவறாது இத்திட்டத்தை பயன்படுத்தி பயனடையவும்.