மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் அடல் பென்ஷன் யோஜனா எனப்படும் ஓய்வூதிய திட்டம் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
பென்ஷன் திட்டம்:
மத்திய அரசின் சார்பில் பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் ஒன்றாகும். இத்திட்டத்தில் இணைய விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் தங்கள் 60 வயது வரை பணம் செலுத்தி சேமிக்க முடியும்.
பயனர்கள் செலுத்தும் தொகையை பொறுத்தே அவர்களது 60 வயதுக்கு பிறகு ரூ.100/- முதல் ரூ.5000/- வரை பென்ஷன் தொகை வழங்கப்படும். அதற்கு வங்கிக் கணக்கு அல்லது தபால் அலுவலக கணக்கு இருப்பது கட்டாயமானதாகும். இத்திட்டத்தின் கீழ் மாத ரூ.76 அல்லது காலாண்டுக்கு ரூ.226 அல்லது அரை ஆண்டுக்கு ரூ.449 செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.