Oplus_131072
*மாதவிடாய் நாள்களில் ஏற்படும் வலி, அதிக இரத்தப்போக்கைத் தடுக்கும் வழிமுறைகள்*
மோர் – மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் உடல் சூட்டைத் தவிர்க்க, ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மோர் பருகலாம். வெள்ளை பூசணியை உணவில் சேர்த்துக்கொள்ளுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்தல் ஆகியவையும் உடல் சூட்டைக் குறைத்து வயிற்று வலியைப் போக்கும்.
புட்டரிசி – அதிக இரத்தப்போக்கு மற்றும் வலியைத் தடுக்க, புட்டரிசி என்று கூறப்படும் சிவப்பு நிற கைக்குத்தல் அரிசியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
உளுந்தங்கஞ்சி – உளுந்தங்கஞ்சியுடன் பனை வெல்லத்தைச் சேர்த்துச் சாப்பிட்டால் இடுப்பு எலும்பு வலுவாகும். இதனால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் இடுப்பு வலி நீக்கும்.
மாதவிடாய் வலிக்கு சில கைமருந்துகளும் உள்ளன
√ முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்து, சூப் செய்து பருகிவரலாம், வயிற்றுவலி குறையும்.
√ முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுவலி குறையும்.
√ முருங்கைக் கீரையுடன் சிறிது கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால், வலி குறையும்.
√ உலர்ந்த புதினா இலையுடன் ஒரு ஸ்பூன் கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், வலி குணமாகும்.
√ கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும்.
√ மாதவிலக்கு வந்த மூன்றாம் நாள் காலை மலைவேம்பு சாறு 1/2 கப் குடிக்கவும்.
√ சாதிக்காய், திப்பிலி, சீரகம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.
√ ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.
√ எள் விதையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும்.
√ ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன், சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிட, வலி குறையும்.




