
“மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்” என்ற கவிதை வரியின் மூலமாக பெண்ணின் பெருமையை பாரதியார் இவ்வுலகிற்கு பறைசாற்றியுள்ளார். மேலும், பெண்கள், தங்களின் உடல் நலத்தை கருத்தில் கொள்ளாமல், இந்த நாட்டிற்கும் அவர்களின் வீட்டிற்கும் தன்னை அர்ப்பணித்து வருவதை நம்மால் அறியமுடிகிறது. இதனை கருத்தில் கொண்டு ஒடிசா அரசு தற்போது பெண்களுக்கான சிறப்பு அறிவிப்பு ஒன்றை சுதந்திர நன்னாளில் வெளியிட்டுள்ளது.
ஒடிசா அரசு:
பெண்கள், தங்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இன்னல்களை கருத்தில் கொண்டு அந்த ஒரு நாட்களில் அவர்கள் ஊதியத்துடன் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.மேலும், இந்தத் திட்டம் அம்மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.