மாதா பிதா குரு தெய்வம் எனும் வரிசையில் தான் எப்போதுமே வணங்கி வருகிறோம் எதற்காக இப்படி வரிசைப்படுத்தி உள்ளோம் தெரியுமா : சத்குரு..!!

மனிதன் தன்னுடைய வாழ்க்கையை படிப்படியாக புரிந்து கொள்வதற்காக இப்படி வரிசைப்படுத்தி இருக்கிறார்கள் இந்த வரிசை என்ன சொல்கிறது என்றால் நமக்கு முதலில் உயர்ந்தது மாதா அதற்கு அடுத்தது பிதா அவர்கள் பின் குரு கடைசியாக தெய்வம் என்கிறது. ஆனால் இது சரியான வரிசை முறை கிடையாது இந்த வரிசை நிர்ணயித்து அவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்று கணக்கு போடுவதற்காக அல்ல மாறாக நாம் இந்த உலகை உணர்வது இந்த வரிசையில் தான் நிகழ்கிறது என்பதை சொல்வதற்காக…

நாம் பிறந்தவுடன் அன்னையை பார்ப்போம் பின்ன தந்தை யார் என்று தெரிந்து கொள்வோம் ஒருவேளை நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் குருவை உணர்வோம் இதற்கு மேலும் நமக்கு அதிர்ஷ்டம் அடித்தால் தெய்வீகத்தை உணர முடியும் மாதா பிதா என்ற இரண்டையும் தாண்டி வளர்ந்தால் தான் குரு என்பவரை உணர்ந்து கொள்ள முடியும். அவரையும் தாண்டும் போது தெய்வீகம் மலரும் இதனால் தான் குறிப்பால் இந்த முறையை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். மாதா எல்லாவற்றிற்கும் அடிப்படையானவள் அவள் இல்லை என்றால் நாம் இந்த மண்ணிற்கு வந்திருக்க முடியாது எதை நாம் பிறப்பிற்கு அடிபடையானதோ அது மிகுந்த மரியாதையை கூறிய விஷயம் தான். அதில் சந்தேகம் இல்லை அதற்கு தேவையான மரியாதையை நாம் செலுத்தி தான் ஆக வேண்டும் ஆனால் அவளை உச்சபட்ச சாத்தியம் என்று நினைப்பது தவறு. அடுத்து பிதா அவர் இல்லாமல் இந்த உலகிற்கு நாம் வந்திருக்க முடியாது எனவே மாதா பிதா இருவரும் நாம் இந்த மண்ணில் உயிர் வாழ்வதற்கு மூல காரணமாய் இருப்பார்கள். ஆனால் நாம் இருக்கும் நிலைத்தாண்டி இன்னொரு பரிணாமத்திற்கு போக வேண்டும் என்றால் நமக்கு குரு மற்றும் தெய்வீகத்தின் துணை வேண்டி இருக்கிறது. ஒரு மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் அந்த நிலையை தாண்டி வளர வேண்டும் என்ற ஆர்வம் துடிப்பும் அவனுள் இருப்பது தான் இயல்பு. தான் இருக்கும் நிலையைத் தாண்டி ஒரு படி ஏனும் எடுத்து வைக்காவிட்டால் நான் ஏன் தான் பிறந்தேனோ என்ற கேள்வி அவனை அழித்துவிடும் அவன் படிப்படியாக தன் நிலை தாண்டி வளர்ந்தான் என்றால் தன் மாதாவிற்கு பிதாவிற்கும் என்றென்றும் நன்றியுடன் திகழ்வான்.நம் வாழ்க்கைக்கு மாதாவுக்கும் பிதாவுக்கும் அடிப்படையாக இருந்தாலும் குருவும் தெய்வீகமுமே நம் வாழ்வின் நோக்கம் அப்படி என்றால் எந்த மாதிரி குருத்து எனக்கு தேவை இந்த கேள்வி உங்களுக்கும் எழலாம். உங்கள் வளர்ச்சிக்கும் அடிப்படையாக யார் இருக்கிறாரோ அவர் உங்கள் குரு ஒவ்வொரு மனிதனுக்கும் குரு தேவை. அவரையும் தாண்டி ஏதோ உன்னுடன் நமக்கு தொடர்பு ஏற்பட்டால் அதனை தெய்வீகம் என்போம் அதுவே வாழ்வின் நோக்கம் எனவே மாதாவும் பிதாவும் நம் பிறப்பின் அடிப்படை குருவும் தெய்வீகமும் நம் வாழ்வின் அடிப்படை இவை அனைத்தும் சேர்ந்தால் தான் நம் வாழ்க்கை நலமாக நடைபெற முடியும்..!!

Read Previous

அழகு என்பதும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு தான : அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!!

Read Next

கை கால்களில் ஏற்படும் குடைச்சலை குணப்படுத்த உதவும் சில வீட்டு வைத்தியங்கள் அவசியம் அனைவரும் படித்திருந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular