மாதா, பிதா, குரு தெய்வம்..!! எல்லா ஆசிரியர்களுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்..!!

மாதா, பிதா, குரு தெய்வம்!

பார்க்கில் ஒரு வயதான பெரியவர் அமர்ந்து கொண்டு இருக்க ! ஒரு படித்த இளைஞன் அவரை நெருங்கி!

ஐயா ! வணக்கம்! நான் உங்கள் மாணவன் என்று சொன்னான்.

அதற்கு பெரியவர் மகிழ்ச்சியுடன் ! சரிப்பா! நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்க!

அதற்கு அவன் நானும் உங்களை மாதிரி ஒரு ஆசிரியர் தான் சார்!

நீங்கள் தான் என் ரோல் மாடல்!

எப்படி தெரியுமா! உங்கள் வகுப்பில் ஒரு நாள் நான் ஒருவனின் கைக்கடிகாரத்தை எடுத்து ஒளித்து வைத்து கொண்டேன்!

தொலைத்த மாணவன் கைக்கடிகாரத்தை காணவில்லை என்று சொல்ல நீங்கள் எல்லா மாணவர்களையும் வரிசையாக நிற்க வைத்து கண்ணை மூட சொன்னீர்கள் ! அப்புறம் ஒவ்வொரு மாணவனின் சட்டை பையில் தேட! என் சட்டைப் பையில் இருந்து கைக்கடிகாரத்தை எடுத்த நீங்கள்!

மாணவர்கள் முன் என்னை தண்டித்து அவமானம் செய்யாமல் விட்டு விட்டீர்கள்!

அன்று முதல் நான் வாழ்க்கையில் திருட மாட்டேன் என்று சபதம் எடுத்தேன். இன்று நல்லாசிரியர் ஆக உங்கள் முன் நிற்கிறேன்! என்றான்.

சார் ! ஏன் என்னை அன்று மாணவர்கள் முன் காட்டி கொடுத்து தண்டிக்காமல் மன்னித்து விட்டீர்கள்! என்று காரணம் கேட்க! அதற்கு அவர் சொன்னார், அப்பா நான் ஒவ்வொரு மாணவராய் சோதனை செய்யும்போது நானும் கண்ணை மூடி கொண்டு தான் சோதனை செய்தேன்! அதனால் உன் முகம் நான் பார்க்கவில்லை! என்றார்!

இளைஞனின் மனம் உச்சி குளிர்ந்தது.

மாணவர்களுக்கு பாடம் எடுப்பது அவர்களை அசிங்க படுத்த இல்லை! அவர்களை திருத்தி நல்ல மனிதனாக்குவது!

எல்லா ஆசிரியர்களுக்கும் இந்த பதிவு அன்பு சமர்ப்பணம்!

Read Previous

canlı casino poker cezaları 12

Read Next

இன்று நாம் நொடிக்கு நொடி ஆர்டர் செய்யும் ‘Zomato’ உருவான கதை தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular