
மாதுளையில் உள்ளமருத்துவ பயன்கள்:
மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு சர்க்கரை சுண்ணாம்பு பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும் உயர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன வறட்டு இருமலுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அடிக்கடி மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகி புதிய இரத்தம் உண்டாகும். இதன் காரணமாக உடல் பலம் அறிவு வளர்ச்சி நினைவாற்றல் ஏற்படும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அரை மாதுளம் பழம் பகல் உணவிற்கு பின் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.
மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும் .மாதுளம் பூக்களை உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு வேலைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால் இருமல் நிற்கும். ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. இதய நோய்கள் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கிறது கொழுப்பை குறைக்கும் தன்மையுடையது.