மாநாட்டில் விஜய் பேசியதை பார்த்து பிரமித்து விட்டேன் எஸ்.ஏ சந்திரசேகர்…!!

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் விஜய் பேசியதை பார்த்து என்னை அறியாமல் கைதட்டி விட்டேன் என்று எஸ் எஸ் சி சந்திரசேகர் கூறியுள்ளார்…

தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது இந்த மாநாட்டில் தொண்டர்கள் மத்தியில் சுமார் 45 நிமிடங்கள் விஜய் உரையாற்றினார், தனது பேச்சில் திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார் விஜயின் ஆக்ரோச பேச்சு தங்களை மெய்சிலிர்க்க வைத்ததாக மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழக தொண்டர்கள் கூறி சிலாகித்தனர், இந்த நிலையில் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ் சி எஸ் சந்திரசேகரும் மாநாட்டில் விஜய் பேசியதை பார்த்து பிரமித்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து எஸ்.ஏ சந்திரசேகர் கூறியது, மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார் அவர் இப்படி பேசுவார் என நான் நினைக்கவே, என் மகன் சினிமாவில் நடித்து பார்த்திருக்கிறேன். ஆனால் மேடையில் அப்படி பேசியதை பார்த்து பிரமித்து விட்டேன் முதலில் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தேன் பின்பு என்னை அறியாமல் கைதட்ட ஆரம்பித்துவிட்டேன். மனதிற்குள் இருக்கும் வேகம் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தாகம் என அனைத்தும் சேர்ந்துதான் அப்படி விஜயை பேச வைத்தது என்று கூறியுள்ளார்…!!

Read Previous

தமிழக முழுவதும் நாளை கிராம சபை கூட்டம்..!!

Read Next

டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த கோரிய மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular