தற்போதைய காலகட்டத்தில் உள்ள பட்டதாரி இளைஞர்கள், படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அந்த துயரத்தை போக்கும் விதமாக தமிழக அரசானது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களின் மூலம் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களை ஆண்டுக்கு 2 முறையும் மற்றும் மாதந்தோறும் 2வது அல்லது 3 வது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தின் மூலம் வேலைவாய்ப்பு முகாமானது விழுப்புரம் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 05.10.2024 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது . மேலும், வேலைவாய்ப்பு முகாம் பற்றிய முழு விவரங்களை கீழே விரிவாக பார்க்கலாம்.
கல்வித்தகுதிகள்:
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், 18- 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், 10th/12th/ITI/diploma/degree முடித்தவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ முதலியவற்றின் நகல் மற்றும் அசலுடன் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்றோ அல்லது (04146-226417), 9499055906 என்ற தொலைபேசி நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் பழனி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற லிங்க்கை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.