
மாம்பழம் சாப்பிட்ட உடனே இந்த உணவுகளை சாப்பிட கூடாது..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
மாம்பழம் சாப்பிட்டதும் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். மாம்பழம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது அனைவருக்கும் மாம்பழம் மிகவும் பிடிக்கும். அனைத்து பழங்களை விடவும் மாம்பழத்தில் இருக்கும் ருசி தனிதான்.
இந்த நிலையில் மாம்பழம் சாப்பிட்ட உடனே ஒருபோதும் தண்ணீர் அருந்தாதீர்கள். இதனால் வயிற்று வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மாம்பழம் சாப்பிட்ட உடனே பாகற்காய் போன்ற கசப்பான உணவுகளை சாப்பிடக்கூடாது. இதனால் சுவாசிப்பதில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. வெப்பமான உணவுகளையும் குளிர்ச்சியான உணவுகளையும் ஒரே நேரத்தில் உட்கொள்ளக் கூடாது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனாலும் தயிர் சாதம் சாப்பிடும் போது மாம்பழத்தை சாப்பிடுவோம். இது மிகவும் தவறான உணவு பழக்கம். எனவே தயிரையும் மாம்பழத்தையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது.
மாம்பழம் சாப்பிட்ட உடனே குளிர்பானங்கள் குடிக்க கூடாது.