மாம்பழ பிரியர்களா நீங்க..? ரசாயனம் சேர்த்து பழுக்க வைத்த மாம்பழத்தை எவ்வாறு கண்டறிவது..? வாருங்கள் தெரிந்து கொள்வோம்..!!

கோடை காலம் வந்துவிட்டாலே மாம்பழ சீசன் வந்துவிடும். கோடை காலத்தில் தான் சுவையான மாம்பழ வகைகள் அதிக அளவில் நமக்கு கிடைக்கும். மாம்பழ சீசன் வந்துவிட்டாலும் மக்களின் தேவைக்கேற்ப மாம்பழங்கள் அதிகமாக கிடைக்காத காரணத்தினால் பல்வேறு இடங்களில் செயற்கையான ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ரசாயனம் சேர்த்து பழுக்க வைத்த மாம்பழத்தால் உடலுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தும். மக்களை பொருத்தவரை பழங்கள் தேவை அதிகமாக இருப்பதால் பழங்களை கால்சியம் கார்பரேட் என்ற சுண்ணாம்புக்களால் பழுக்க வைக்கின்றனர். குறிப்பாக தற்பொழுது உள்ள மாம்பழ சீசனில் மாம்பழங்கள் விரைவாக பழுக்க வேண்டும் என்பதற்காகவே சுண்ணாம்பு கல்லால் செயற்கையாக பழுக்க வைக்கின்றனர்.

இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் சாப்பிட்டாலும் அவர்களின் உடலுக்கு அதை தீங்கினை ஏற்படுகிறது. கால்சியம் கார்பைட் சுண்ணாம்புகளால் ஏற்படும் பாதிப்பு இந்த சுண்ணாம்பு கல்லால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடும் போது உடலில் புற்றுநோயை கூட ஏற்படுத்தும் செல்களையும் உருவாக்கும் தன்மை கொண்டது.

இதுபோக வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, அல்சர், நிரந்தர கண் பாதிப்பு, தோல் பாதிப்பு போன்ற பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

  1. செயற்கையாக பழக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் முழுவதுமாக ஒரே நேரத்தில் இருக்கும் ஆனால் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் இருக்கும்.
  2. செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தின் ரசாய வாடை இருக்கும் இயற்கையான பழக்க வைக்கப்பட்ட மாம்பழத்தில் இனிப்பு மற்றும் பழத்தின் வாசனை மட்டுமே இருக்கும்.
  3. மாம்பழத்தின் வெளிப்புற பக்கங்களில் ஏதேனும் அடிபட்டது போல் இருந்தால் அதனை வாங்க கூடாது அது சுண்ணாம்பு கல்லால் ஏற்பட்ட சேதாரமாக கூட இருக்கலாம்.
  4. மாம்பழங்களை ஒரு பக்கெட் தண்ணீரில் போடும்போது  அது உள்ளே முழுகினால் இயற்கையான பழுக்க வைக்கப்பட்டது என்று அர்த்தம் மிதந்தால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டது என்று அர்த்தம்.

Read Previous

உங்கள் உடலில் அதிக அளவு கழிவுகள் சேர்ந்துள்ளதா..? இந்த மூலிகையை கொதிக்க வைத்து குடித்து பாருங்கள் உடனடி தீர்வு..!!

Read Next

மண் பானையில் தண்ணீர் அருந்துவது இவ்வளவு நன்றா..? முழு விவரம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular