
மாம்பழ மோர் குழம்பு செய்முறை
தேவையான பொருட்கள் :
* மாம்பழம் 1
* தயிர் 1 கப்
* இஞ்சி ஒரு துண்டு
* பச்சை மிளகாய் 2
* தேங்காய் துருவல் 1 கப்
* கடுகு கால் டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு கால் டீஸ்பூன்
* சீரகம் கால் டீஸ்பூன்
* வெந்தயம் கால் டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் 2
* கறிவேப்பிலை ஒரு கொத்து
* எண்ணெய் தேவையான அளவு
* உப்பு தேவையான அளவு
செய்முறை :
இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், தேங்காய் ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொதிக்க விட வேண்டும்.
இதில் உப்பு, கடைந்த தயிர், மாம்பழத் துண்டுகள் சேர்த்து, கொதித்து வந்ததும் இறக்க வேண்டும்.
எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்க வேண்டும். இப்போது மாம்பழ மோர் குழம்பு ரெடியாகி விட்டது.