முக்கனிகளில் ஒன்றாக கருதப்படும் மாம்பழத்தை பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் நாம் அறிந்திருப்போம். ஆனால் மாம்பூவில் எவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளது என்பது குறித்து இப்பதிவை தெரிந்து கொள்வோம்.
மாம்பூவில் வாய் புண் ,பல்வலி, பற்கள், ஈறுகளுக்கு வலிமை தருகின்றது. விட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்தவையாக இந்த மாம்பூக்கள் செயல்படுகின்றது. மாம்பூ தொண்டையில் ஏற்படும் புண்களை குணப்படுத்துகின்றது. மாம்பூக்களை சுத்தம் செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிழிந்து தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளித்தால் தொண்டை வலி உடனடியாய் குணமடையும்.
உலர்ந்த மாம்பூக்களை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பித்தால் கொசு அண்டாது, மாம்பூ, சீரகம் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து அதில் இரண்டு சிட்டிகை சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் மூலநோய் கட்டுப்படும்.
மூலதத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கை மாபு குணப்படுத்துகிறது, மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து காயவைத்து காலையில் வெறும் வயிற்றில் வெண்ணீர் சேர்த்து பாருக வேண்டும். மாம்பூ, மாதுளை பூ, மாந்தளிர் ஆகிய அனைத்தையும் உலர்த்தி அரைத்து பசும்பாலில் கலந்து காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.