
மாரடைப்பு..!! இதயத்தில் இந்த திடீர் பாதிப்பிற்கு காரணம் என்ன தெரியுமா..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறதோ அதே அளவிற்கு நோய்களும் மனிதர்களிடையே வளர்ந்து வருகிறது என்பதுதான் உண்மை. இவ்வாறு மனித உடலில் நோய்கள் வருவதற்கான முக்கியமான காரணம் என்னவென்றால் அது உணவு பழக்க வழக்கம் தான். மாரடைப்பு மற்றும் இதயத்தில் திடீரென பாதிப்பு ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரை நோயால் மாரடைப்பு ஏற்படும் என்றால் நம்புவீர்களா.. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அளவுக்கு அதிகமாக ஆகும்பொழுது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. அது மட்டும் இன்றி அதிகமான அளவில் கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இதனாலும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடலில் உள்ள கொழுப்பின் அளவு அதிகமாகும் பொழுதும் மாரடைப்பு ஏற்படும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாமல் கைக்கு கிடைக்கும் உணவுகளை எல்லாம் சாப்பிடுகிறோம் இந்த காலகட்டத்தில். எனவே உணவு முறை ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தாலும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.