நமது உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால்கள் இருக்கும். நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால். இதில் கெட்ட கொலஸ்ட்ராலால் நமது உயிருக்கு பெரும் ஆபத்து கூட வரலாம். ஆகையால் அதைக் கட்டுக்குள் வைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
இந்த கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற ஆயுர்வேதத்தில் தீர்வு இருக்கிறது. அர்ஜுனா மரத்தின் உட்புறத்தில் இருக்கும் பட்டை ஆயுர்வேத மருத்துவத்தில் இதயம் உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக உபயோகிக்கப்படுகிறது. இந்தப் பட்டையை வைத்து தயாரிக்கப்படும் டீயை குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
இது நமது இதயத்தின் தமனிகளின் அடைப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். ரத்த நாளங்களை தளர்த்தவும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் இது மிகவும் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இரத்த ஓட்டத்திற்கான எதிர்ப்பை குறைத்தும் விடுகிறது.
அதுமட்டுமில்லாமல் அர்ஜூனா பட்டையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கின்றன. ஆகையால் இதை சாப்பிட்டால் இதய அமைப்பில் இருக்கும் வீக்கத்தை குறைக்க உதவும். மேலும் இந்த பட்டை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியதாக இருக்கிறது.




