
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார். சமீப காலமாகவே இவர் நடித்துவரும் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வருகின்றது.
மேலும் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்ற விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, அபிநயா, கிங்ஸ்லி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.
டைம் டிராவல் கதையை மையமாகக் கொண்டிருக்கும் மார்க்க ஆண்டனி திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து வெற்றி நடை போட்டு வருகின்றது. இது குறித்து விஷால் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் “மார்க் ஆண்டனி படத்தை தமிழ் ரசிகர்கள் மட்டுமல்ல பல மொழி ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். மேலும் நீங்கள் கொடுத்த காசுக்கு மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். நான் உறுதி அளித்தபடியே ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு அளிப்பேன்” என்று கூறியிருக்கிறார். இந்த செய்தி இணையத்தில் பரவி வருகின்றது.