
மார்டன் உடையில் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன். 2015 ஆம் ஆண்டு டம்மி டப்பாஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து ஆண் தேவதை, ஜோக்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்களின் கவனத்தை வென்றார் .2019 ஆம் ஆண்டு குக் வித் கோமாளி சீசன் 1ல் பங்கேற்று இரண்டாம் பரிசையும் வென்றார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரும் புகழும் சேர்ந்து அடிக்கும் லூட்டி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு முயற்சி செய்து வரும் ரம்யா பாண்டியன் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது தான் எடுக்கும் கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இளைஞர்களை கவர்ந்து வருவார்.
சோசியல் மீடியாவில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன் தற்போது மார்டன் உடையில் காபி குடிக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
View this post on Instagram