மார்பகம், வாய், கருப்பை, நுரையீரல், பெருங்குடல் ஆகியவற்றில் புற்று நோய் உண்டாவதை தடுக்க வேண்டுமா..?? இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

Oplus_131072

மார்பகம், வாய், கருப்பை, நுரையீரல், பெருங்குடல் ஆகியவற்றில் புற்று நோய் உண்டாவதை தடுக்க வேண்டுமா?…

சவ்சவ் நம் நாட்டில் பெங்களுரு கத்தரிக்காய் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இக்காய் பொதுவாக குளிரான பகுதிகளில் விளைகிறது.

நேபாளத்தில் வீட்டுத் தோட்டத்தில் இக்காய் பயிர் செய்யப்படுகிறது. சவ்சவ் பச்சையாகவோ, வேக வைத்தோ, வறுத்தோ உண்ணப்படுகிறது.

சவ்சவ் காயானது குகுர்பிட்டேசியே என்ற வெள்ளரி குடும்பத்தைச் சார்ந்தது. வெள்ளரிக்காய், தர்பூசணி, பூசணி ஆகியோர் இதன் உறவினர்கள் ஆவர்.

இக்காயானது வெள்ளரியைப் போன்று நீர்ச்சத்தினைக் கொண்டுள்ளது. இக்காயின் அறிவியல் பெயர் சீக்கியம் எடுல் என்பதாகும்.

சவ்சவ்வின் அமைப்பு மற்றும் வளரியல்பு:

சவ்சவ்வானது கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இக்கொடியானது முறையாக படரவிடப்படும் போது 12 மீட்டர் உயரம் வரை வளரும். இத்தாவரக் கொடியை செயற்கையாக பந்தலிட்டோ, மரங்கள், குற்றுச்செடிகள் மீது படரவிட்டோ வளர்க்கலாம்.

இக்கொடியின் தண்டானது மெல்லிதாக கிளைகளுடன் காணப்படுகிறது. இக்கொடியில் அகலமான பச்சை நிற இலைகள் காணப்படுகின்றன.

#சவ் சவ் கொடி:

இக்கொடியின் இலைகள் வெள்ளரியின் இலைகளை ஒத்து காணப்படுகின்றன. இக்கொடியானது சிறிய வெளிர் பச்சைநிற இரு மலர்களைப் பூக்கிறது.

#சவ் சவ் பூ:

மகரந்த சேர்க்கை நடைபெற்ற 30 நாட்களில் இக்காய் அறுவடைக்கு தயாராகிறது. ஒவ்வொரு கொடியும் ஒரு சீசனில் 150 காய்களைக் காய்கின்றது. இக்கொடியானது நல்ல வடிகால் அமைப்புள்ள வளமான ஈரப்பதமிக்க மண்ணில் நன்கு வளர்கிறது. இப்பயிர் வளர குளிர்ந்த காலநிலையும், நல்ல சூரிய ஒளியும், போதுமான மழையும் தேவை.

சவ்சவ் காயானது பேரிக்காய் வடிவில் காணப்படுகிறது. இக்காயானது சற்று தட்டையாக கடினமான மேற்புறத் தோலினைக் கொண்டுள்ளது. இக்காய் பொதுவாக 10-20 செமீ நீளமும், 7-12 செமீ அகலமும், 100-900 கிராம் எடையிலும் காணப்படுகின்றது.

இக்காயானது வெளிப்புறத்தில் வெளிர் பச்சை, அடர் பச்சை, மஞ்சள் கலந்த பச்சை நிறமான தோலைக் கொண்டிருக்கிறது. இக்காயின் உட்புற சதைப்பகுதி வெள்ளை அல்லது வெளிர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

இக்காயானது தனிப்பட்ட மணத்துடன் இனிப்பு சுவையினைக் கொண்டுள்ளது. இக்காயின் உள் நீள்வட்ட வடிவ வெளிர் பச்சைநிற விதை மெல்லிய தோலால் மூடப்பட்டிருக்கும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்….

#சவ்சவ்வின் வரலாறு:

சவ் சவ்வின் தாயகம் மத்திய அமெரிக்காவில் உள்ள மலைப்பகுதிகள் ஆகும். தெற்கு மெக்ஸிகோ மற்றும் குவாத்த மாலா பகுதிகளில் பராம்பரியமாக இக்காய் பயிர் செய்யப்பட்டு வரப்படுகிறது.

தற்போது வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல மலைப்பகுதிகளில் இக்காய் பயிர் செய்யப்படுகிறது. உலகெங்கும் இக்காய் பயன்படுத்தப்படுகிறது.

சவ்சவ்வில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

சவ்சவ்வில் விட்டமின் சி, பி6 (பைரிடாக்ஸின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), ஃபோலேட்டுகள் ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன. மேலும் இதில் பி1(தயாமின்), பி2(ரிஃபோ ப்ளோவின்), பி3(நியாசின்), இ, கே ஆகியவையும் உள்ளன. இக்காயில் தாது உப்புக்களான கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம் போன்றவையும் காணப்படுகின்றன.
மேலும் இக்காயில் குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட்டுகள், புரோடீன்கள், நார்ச்சத்து முதலியவைகளும் உள்ளன. தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்….

சவ்சவ்வின் மருத்துவப் பண்புகள்:

விட்டமின் சி, ஃபோலேட்டுகள், செலீனியம், விட்டமின் இ, மாங்கனீசு, துத்தநாகம், விட்டமின் பி6 ஆகியவை புற்றுநோய் எதிர்ப்பாற்றலை உடலுக்கு வழங்குகின்றன.

விட்டமின் சி, ஃபோலேட்டுகள், விட்டமின் பி6 ஆகியவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படாமல் தடைசெய்கிறது. விட்டமின் இ குடல் புற்றுநோயினைத் தடைசெய்கிறது.

விட்டமின் சி வயிறு, மார்பகம், வாய், கருப்பை, நுரையீரல், பெருங்குடல் ஆகியவற்றில் புற்றுநோய் உண்டாவதை தடை செய்கிறது. இந்த விட்டமின்கள் வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தடைசெய்கிறது. இதனால் செல்களில் ஏற்படும் மரபணு மாற்றங்கள் தடுக்கப்பட்டு புற்றுநோய் உண்டாவது கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே சவ் சவ்வினை உண்டு புற்று நோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

உடலுக்குத் தேவையான ஆற்றலினைப் பெற:

சவ்சவ்வில் காணப்படும் மாங்கனீசு கொழுப்பு மற்றும் புரதத்தினை உடைத்து உடலுக்குத் தேவையான ஆற்றலினை வழங்குகிறது. எனவே சவ் சவ்வினை காலை உணவில் சேர்த்து நமது உடலுக்குத் தேவையான ஆற்றலினை உடனடியாகப் பெறலாம்.

நல்ல செரிமானம் பெற மலச்சிக்கல் தீர:

சவ்சவ்வில் நார்ச்சத்து அதிகமாகக் காணப்படுகிறது. இந்த நார்ச்சத்து குடலில் உள்ள கழிவு நச்சினை ஒன்று சேர்த்து மென்மையாக்கி கழிவாக வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் வருவது தடுக்கப்படுகிறது.

Read Previous

பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுவது ஏன்..??

Read Next

மன அமைதிக்கான சில சிந்தனைகள்..!! கண்டிப்பா படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular