மாற்றத்தை விதைத்த சாமானியன் பொன்மாரியப்பன்..!!

இன்றைய காலங்களில் சாதாரண மனிதர்கள் கூட சாதனையாளர்களாக மாற முடியும் அப்படி இருக்கும் பட்சத்தில் சாதனைகளை நீ அடைய வேண்டுமென்றால் சரித்திரங்கள் நீ படைக்க வேண்டும் என்றால் உனக்குள் உன்னை தேடு அந்த தேடுதல் உனக்கான மாற்றத்தை தரும் என்று ஒரு சாமானியன் நிரூபித்துள்ளார்..

தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரத்தை சேர்ந்தவர் பொன்மாரியப்பன் எட்டாம் வகுப்பிலேயே தனது படிப்பை நிறுத்திவிட்டு தனது குடும்பத்திற்காக முடி திருத்தம் செய்யும் தொழிலை செய்து வந்தார், தொழிலை விரும்பி செய்தது மட்டுமல்லாமல் புதிய மாற்றத்தையும் கொண்டுவர முயற்சித்தார், அப்படி தனது முடி திருத்தம் செய்யும் இடத்தில் ஒரு பகுதியை நூலகமாக மாற்றி முடி திருத்தம் செய்ய வருபவர்கள் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றும் சிறுக சிறுக சேமித்த புத்தகங்கள் என 3000 புத்தகங்களை தனது சலூனில் வைத்துள்ளார், சிறியவர் முதல் பெரியவர் வரை கவிதை, கதை, காதல் மற்றும் நாவல்கள், போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் கூட இவர் சலூனில் உள்ளது, இவரின் முயற்சியை குறித்து பலரும் பாராட்டி வந்த நிலையில் பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் மனதின் குரல் 100 நாள் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது, நடிகர் கமலஹாசன் எம்.பி கனிமொழி மற்றும் பலரும் இவரை தேடி வந்து இவருக்கு புத்தகங்கள் வழங்கி வந்தனர், இவரது சலூன் நூலகத்தில் புத்தகங்களைக் கடந்தும் மைக் ஒன்று வைக்கப்பட்டுள்ளது, இன்றைய காலகட்டங்களில் பலரும் மாணவர்கள் மேடையில் பேசுவதற்கு பயமும், பதட்டமும் கொள்கின்றனர் அப்படி பயமும் பதட்டமும் நீங்குவதற்காக தனது சலூன் நூலகத்தில் மைக் வைத்து அதில் ஏறி பேசுவதற்கு ஊக்கம் தந்து வருகின்றனர், திறமையும் ஊக்கமும் இருந்து தன்னை தூக்கி விடுவதற்கு சரியான வேலையோ சரியான நபரோ கிடைக்காமல் எத்தனையோ பேர் போராடும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் பொன் மாரியப்பனின் இந்த செயல் பெரிதும் பாராட்டுக்குரியது மேலும் இணையவாசிகள் பலரும் இவரை பாராட்டியும் இவருக்கு புத்தகங்களை அனுப்பியும் வருகின்றன..!!

Read Previous

துர்க்கையை வழிபட்டால் ராகு தோஷம் நீங்கும்..!!

Read Next

நாமக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி எம்பி மாதேஸ்வரனை சந்தித்தார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular