இன்றைய சமுதாயத்தில் பலரும் இயற்கையை அழித்தும் குப்பைகளை பார்க்கும் இடத்தில் கொட்டியும் செல்வது வழக்கமாகிவிட்டது அத்தகைய குப்பையை சுத்தம் செய்தல் மூலம் உடலும் சுற்றமும் சுத்தமாகவே இருக்கும் இதனால் நோய் நொடியில் வராது என்று அவர்கள் அறிவதில்லை..
அரசியல் சீர்கெட்டு விட்டது சமுதாயம் அறமற்று செயல்படுகிறது என்று பலரும் புலம்புகின்றனர், ஆனால் இதை மாற்ற நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று இங்கு யாருக்கும் தெரிவதில்லை சுத்தம் சுகாதாரம் வாழ்நாள் முழுவதும் சோறு போடும் என்ற பழமொழியும் உண்டு, இதனால் மாற்றம் தன்னில் இருந்தால் தொடங்க வேண்டும் என்றும் அந்த மாற்றத்தின் அடையாளத்தை முதலில் நாம் தான் ஆரம்பிக்க வேண்டும் என்றும் இங்கு பலர் மறந்து விடுகின்றனர், சுத்தமாக இருப்பதனால் சுற்றுச்சூழலும் பாதிப்படையாமல் இயற்கையான முறையில் நமக்கு தேவையான அனைத்தையும் தருகின்றது முடிந்தவரை சுற்றத்தை மட்டும் அல்லாமல் சமுதாயத்தின் சுற்றமாக மாற்றுவோம்..!!