• September 11, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ்..!! இன்றுமுதல் இயங்கும் தாழ்தள பேருந்துகள்..!!

சென்னையில் கடந்த 2018-ஆம் ஆண்டு வரை மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறும் வசதியோடு தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் பிறகு, அதிகமாக செலவு இழுப்பதாலும் மற்றும் தாழ்தளம் மூலமாக எளிதில் மழைநீர் உட்புகுவதாலும் அப்பேருந்துகள் சில வருடங்களாக இயக்கப்படமால் இருந்தது. இது தொடர்பாக, மாற்றுத்திறனாளி உரிமை ஆர்வலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று மாநகர போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டனர்.

இன்றுமுதல் இயங்கும் தாழ்தள பேருந்துகள்:

சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் கீழ், தாழ்தள சொகுசு பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், நீல நிறத்தில் செயல்படும் இந்த பேருந்தில் CCTV கேமரா, மொபைல் சார்ஜிங், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக இருக்கைகளும் பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

Read Previous

முதல்வர் கான்வாய் பின்னே சென்ற ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் பலி..!!

Read Next

தாய்ப்பால் சுரப்பதற்கான அற்புத மூலிகை மருத்துவம்..!! ஆரோக்கியமாகும் குழந்தை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular