
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி இந்நாட்டில் சமீப நாட்களாக “பிரெட்டி” என்கின்ற பருவ கால சூறாவளிப் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரு வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுத்த கூடிய அளவிற்கு காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும் என்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த “பிரெட்டி” சூறாவளி புயலுக்கு இதுவரை மொத்தம் 326 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா-வுக்காக மனிதநேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்தது. இந்த தகவலின் அடிப்படையில் சூறாவளியால் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1.8 லட்சம் பேர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
மேலும் எண்ணற்ற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டு பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த நிலைமை மோசம் அடைந்து கொண்டே செல்கிறது .மேலும் இந்த “பிரெட்டி” சூறாவளியின் தாக்கத்தினால் வெள்ளம் உள்ளிட்ட காரணிகளால் இதுவரை 5.1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த புயல் பாதிப்பால் காலரா உள்ளிட்ட நோய் பரவலுக்கான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.