மாலை நேரம் சூப்பரான Non-Veg ஸ்நாக்ஸ் சாப்பிட சூப்பரான சிக்கன் கோலா உருண்டை..!!

மாலை நேரம் சூப்பரான Non-Veg ஸ்நாக்ஸ் சாப்பிட சூப்பரான சிக்கன் கோலா உருண்டை..!!

தேவையான பொருட்கள்:

  • 1 முட்டை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு

அரைக்க :

  • 1/4 கி எலும்பில்லாத சிக்கன்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் கசகசா
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்

 

செய்முறை:

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • இந்த கலவை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் தேவையான அளவு உப்பு, முட்டை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • இப்போது இதனை சிறு உருண்டைகளாக உருட்டி அரை மணி நேரம் வரை அப்படியே வைக்கவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் கோலா உருண்டை தயார்.

Read Previous

போலீஸ் விசாரணையில் வாலிபர் மரணம்..? மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் பிரேத பரிசோதனை..!!

Read Next

உங்கள் உடலில் உள்ள‌ நச்சுக்களை வெளியேற்ற வேண்டுமா..? அப்போ இதை குடிங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular