
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள “மாவீரன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது என்று பட குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் தற்பொழுது வெளியாகி உள்ள திரைப்படம் “மாவீரன்”. இந்த திரைப்படத்தை ரசிகர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயனும் பார்த்து உள்ளார்.
இந்நிலையில் மலேசியாவில் திரைப்பட பிரமோசனுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் “மாவீரன்” திரைப்பட குழுவினர் விமானம் மூலம் சென்று உள்ளனர். அப்பொழுது இயக்குனர் சங்கரின் மனைவி மற்றும் அவரது மகள் அதிதியுடன் மலேசியா சென்று உள்ளார்.
அப்பொழுது விமானத்தில் சங்கரின் மனைவிக்கு எக்னாமிக்கல் டிக்கெட் புக்கிங் செய்து படக் குழுவினர் கொடுத்ததால் அவர் படக் குழு மீது வருத்தத்தில் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.