
நடிகை மாளவிகா மோகனின் பிறந்த நாள் இன்று(ஆகஸ்ட் 4).இவர் பிரபல பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் கே.யு மோகன் அவரின் மகளாவார்.மாளவிகா 1992 ம் ஆண்டு ஆகஸ்ட் 4 ம் தேதி கேரளாவில் பிறந்தார்.இவர் மாடலிங் துறையில் செயலாற்றி வந்தார். பின்னர் தற்போது ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன் பிறகு மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், ”இனிமேல் என்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். அது ரூ.500 கோடி வசூலிக்கும் பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லையென்றால் அதில் நடிக்கப் போவதில்லை” என்று தெரிவித்து இருந்தார்.