
உன் கோபத்திற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது
உனக்கு பிடிக்காத ஒன்றை
நான் செய்து இருக்கலாம்
உன் பிரியத்திற்கும் ஒரே காரணம்…உன் மனதிற்கான நெருக்கத்தை தந்திருக்கலாம்
உன் வெறுப்பிற்குமான காரணம் என்னுடைய சுயதிமிராக இருக்கும்
உன் இரவிற்கான காரணம்
இயற்கையின் பூர்த்தியாகலாம்
உன் புகழ்ச்சியின் பின்னணி
என் குளிர்ச்சியான முகமாகலாம்
இப்படி உன்னை பொருத்தவரை
எல்லாவற்றுக்கும்
ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கிறது
ஆனால் எனக்கோ
உன் கோபம் பல அச்சங்களை தருகிறது என் தவறு என்னவென்று யோசித்து யோசித்து மாய்கிறேன்
உன் பிரியத்தை நிமிடத்திற்கு நிமிடம் நினைத்து நினைத்து பூரிக்கிறேன்
உன் வெறுப்பை…
தூரம் போய்விட்டேனோ உன்னில் இருந்து என பதைபதைக்கிறேன்
உன் இரவு..என் பகல்களை புரட்டி போடுகிறது
உன் புகழ்ச்சி ….என்னை திமிர் கொள்ள வைக்கிறது
ஆனால்
உனக்கு இவை எல்லாவற்றுக்கும்
எளிதில் கடந்து போகும்
ஒரே ஒரு காரணம் மட்டுமே தான் ❣️
உண்மை உணரப்படும் நிமிடத்தில்
உடைபடாத என்னை காட்ட மேலும் ஒரு பூட்டு போட்டுக் கொள்கிறேன்
நீயென்ன என்னை பூட்டி வைப்பது என்ற திமிருடன்
எனக்கு நானே..