தேவையான பொருட்கள் :
சிக்கன் – அரை கிலோ
தேங்காய் (துருவியது) – 1 கப்
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 6
பச்சை மிளகாய் – 6
தேங்காய் எண்ணெய்
சின்ன வெங்காயம் -1
பெரிய வெங்காயம் -1
தக்காளி – 1
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
வெந்தயத்தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்- ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
சின்னவெங்காயம், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேங்காய் துருவலை போட்டு வறுத்த பின்னர் அதோடு கொத்தமல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா பொடி, மஞ்சள் தூள் யாவும் போட்டு சிறிது கிளறி விடவும். கலவை பொன்னிறமாக வந்ததும் அதனை விழுதாக அரைத்துத் தனியாக வைத்து கொள்ளவும்.
அதே கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
இப்போது சிக்கன் துண்டுகளைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து மெதுவாக கிளறவும்.
பின்னர் இரண்டு கப் நீர் ஊற்றி மெதுவாக கிளறி விடவும். இப்போது பாத்திரத்தை மூடி சிக்கனை வேக விடவும்.
பாத்திரத்தைத் திறந்து நறுக்கி வைத்த பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் போட்டு மேலும் சிறிது தண்ணீர் ஊற்றவும். இப்போது பாத்திரத்தை மூடி 20 நிமிடங்கள் மறுபடியும் வேக வைக்கவும்.
பின்னர் மூடியைத் திறந்து அரைத்து வைத்த தேங்காய் மசாலா விழுதினை போட்டு நீர் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
சிறிது கறிவேப்பிலை போட்டு குறைவான தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
இப்போது சுவையான மணக்கும் சிக்கன் குழம்பு ரெடி.