
படித்ததில் பிடித்த பதிவு.. உண்மையான பதிவு இது..!!
முன்னாட்களில் பெண்கள் வேலைக்குச் செல்லாமல் கணவனை நம்பி இருந்தார்கள் என்பதை அடிமைத்தனம் என்று நினைத்தால் அது நிச்சயமாக முட்டாள்தனம் என்பதே உண்மை.
யோசித்துப் பார்த்தால் தெரியும் அது ஒரு பாதுகாப்பு வளையம் என்பது. அங்கு வேலைப் பங்கீடு (division of labour) இருந்தது. பொருளீட்டுதல், மனைவிக்கும், குழந்தைகளுக்கும் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து அவர்களை நலமாக வைத்துக்கொள்வது கணவனின் வேலை.
கணவன் கொண்டு வரும் பொருளை சீராகவும் சிக்கனமாகவும் செலவு செய்து கணவன், குழந்தைகளின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை (உணவு, நல்ல பழக்கங்களை சொல்லித்தருதல்) போன்றவை மனைவியின் கடமையாக இருந்தது.
இருவரும் சேர்ந்து சுற்றுலா, பூங்கா, உணவு விடுதி என்று போகாவிட்டாலும் ஒருவர் மேல் ஒருவருக்கு புரிதல், அன்பு பரிமாற்றம் ஆகியவை நன்றாகவே இருந்தது.
அப்படியான காலத்தில் தான் பெண்களிடம் கற்பும் ஆண்களிடம் உழைப்பும் 100% இருந்தது..