
மிகவும் வித்தியாசமாக யோசிக்கும் சிறுவன்..!! ஜீன்ஸ் பேன்ட்டில் விவசாயம்..!!
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவன் அபினவ், சிறு வயது முதலே விவசாயத்தில் அதீத ஈடுபாடு கொண்டிருந்தான். தன் வீட்டை ஒட்டிய இடத்தில் சிறு அளவில் அபினவ் பயிர்களை வளர்த்து வந்தான். ஆனால், சிறுவன் பயிரிட்ட விதைகளை கோழிகள் கொத்தித் தின்று அழித்து வந்தன. இதற்கு ஒரு தீர்வு காண யோசித்த அவன், வீட்டில் இருந்த பழைய ஜீன்ஸ் பேன்ட்டுகளை மண் நிரப்பி அதில் பயிரிட தொடங்கினான். அந்த முயற்சியிலும் அபினவ் வெற்றியும் பெற்றுவிட்டான்.