மிக சுலபமாக கோவில் சாம்பார் சாதம் செய்வது எப்படி?.. முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

கோவில் சாம்பார் சாதம் செய்வது எப்படி …..

 

தேவையான பொருட்கள்

 

1கப் துவரம் பருப்பு

1/4டீ ஸ்பூன் மஞ்சள் தூள்

1/2 கேரட்

1/2முள்ளங்கி

2 கோவைக்காய்

1 பெரிய தக்காளி

6 அவரைக்காய்

6 பீன்ஸ்

12சக்கரை வள்ளி கிழங்கு

2 table spoon பச்சை பட்டாணி

2 டேபிள் ஸ்பூன் பச்சை வேர்கடலை

2 பச்சை மிளகாய்

2டீ ஸ்பூன் சாம்பார் தூள்

1டீஸ்பூன் வர மிளகாய் தூள்

2டீஸ்பூன் வர கொத்த மல்லி தூள்

தேவையான அளவுஉப்பு

2 டேபிள் ஸ்பூன்எண்ணெய

1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்

1 டேபிள் ஸ்பூன் நெய்

1பெரிய நெல்லிக்காய் அளவு புளி

1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்

1/2 ஸ்பூன் வெந்தய பெருங்காத்தூள்

1 ஸ்பூன் கடுகு

1 துண்டு பட்டை

2 கிராம்பு

2 table spoon தேங்காய் துருவல்

 

செய்முறை

 

மேற்கூறிய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.காய்களை சிறிது பெரிய சைஸில் படத்தில் காட்டியுள்ளவாறு அறிந்து கொள்ளவும்.துவரம் பருப்பை தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.

 

பிரஷர் பேனில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு பட்டை கிராம்பு பச்சைமிளகாய் சேர்த்து கொள்ளவும். 10 செகண்ட் கழித்து அதில் அறிந்த முள்ளங்கி சேர்த்துக் கொள்ளவும்.லேசாக வதக்கி பிறகு பொடியாக அரிந்த தக்காளியை சேர்த்துக் கொள்ளவும்.பிறகு பட்டாணியை தவிர்த்து எல்லா காய்களையும் சேர்த்து 10 செகண்ட் வதக்கிக் கொள்ளவும். காய் நிறம் மாறும் அளவுக்கு வதக்க வேண்டாம்.

 

பிறகு அதில் சாம்பார் பொடி வரமிளகாய் தூள் கொத்தமல்லி பொடி உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதி வரும் போது நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.ஒரு கொதி வந்த பிறகு குக்கர் மூடியை மூட க்விட்டு மூன்று சவுண்ட் விடவும்.ஆவி அடங்கிய பின் மூடியைத் திறந்து அதில் வேக வைத்த துவரம் பருப்பு மற்றும் பட்டாணியை சேர்த்து பட்டாணி வேகும் அளவிற்கு ஒரு சவுண்டு விட்டு வேகவிடவும்.

 

இப்போது கரைத்து வைத்த புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு தேங்காய் துருவல் சிறிது சுடுநீர் சேர்த்து கையில் பிழிந்து அதன் பாலை எடுத்துக் கொள்ளவும். அந்தப் பாலை கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். தேங்காய் பிழிந்த பிறகு துருவலை பொரியலுக்கு சேர்த்துக்கொள்ளலாம்.

 

இப்போது சாதத்தை குழம்பிற்கு தகுந்தாற்போல சேர்த்து நன்கு மிதமான தீயில் கலந்து விடவும். சாதம் நிறைய சேர்க்க வேண்டாம் கெட்டியாக இருந்தால் ஆற ஆற இன்னும் கெட்டியாகிவிடும்.அதனால் குழம்பில் சாதம் சேர்க்கும் போது தளர்ச்சியாக இருக்கும் படி குழ குழப்பாக இருக்கும் படி கலந்து கொள்ளவும். உங்களுக்கு தேவையான அளவு நெய் சேர்த்துக் கொள்ளவும். தொட்டுக்கொள்ள வடகம் அப்பளம் சிப்ஸ் ஏதாவது ஒன்று ரெடி செய்து கொள்ளவும்.

 

இதை கோவில் சாம்பார் சாதம் என்று கூட சொல்லலாம் ஏனென்றால் வெங்காயம் சேர்க்க வில்லை. கோவில்களுக்கு சாம்பார் சாதம் செய்து தருவதாக இருந்தால் இது போல செய்து கொடுக்கலாம்.குழம்பு வைக்கும் பொழுது தாராளமாக அதிக அளவில் குழம்பு வைத்துக் கொள்ளவும். சாதம் குழைவாக சேர்த்து கலந்து விடவும். ஏனென்றால் பிரசாதம் கொடுக்க கொடுக்க சாதம் இறுகிக் கொள்ளும்….

Read Previous

இரண்டு முகங்கள் கொண்ட நொறுங்கிய ஜீவன்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

நீரை சுத்திகரிக்கும் தேற்றாங்கொட்டை..!! கண்டிப்பாக அனைவரும் படித்து பயன்பெறுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular