
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்திக், விக்ரம் முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகியது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இத்திரைப்படம் வசூல் ரீதியாக பயங்கர வெற்றியை அடைந்தது. இதுவரை சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் “பொன்னியின் செல்வன்” வசூலித்துள்ளதாய் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து “பொன்னியின் செல்வன் 2” திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று பட குழுவினர் அதிகாரப்பூர்வமாய் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் “பொன்னியின் செல்வன் 2” படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் மாதம் 29ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடத்த பட குழுவினர் திட்டமிட்டு உள்ளதாய் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து “பொன்னியின் செல்வன் 2” இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதல் பாகம் வெளியாகும் போது அதனுடைய இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், கமலஹாசனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.