மின்சாரம் தாக்கி மாணவன் படுகாயம்..!! மின் ஊழியர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு..!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள
பரப்புவிளையை சேர்ந்தவர் ஜெய சிங் கட்டிட தொழிலாளி. இவருடைய மூத்த மகன் விஷ்வா ( வயது 15 ). இவன் ஒரு தனியார் பள்ளியில் 10 – ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் நேற்று முன்தினம் விஷ்வா தனது நண்பர்களுடன் பழையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை பாார்க்க சென்றபோது மின் கம்பத்தில் சுற்றிவைத்திருந்த மின்கம்பியால் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தான். இந்த சம்பவத்தில் குறித்த புகாரின் பேரில் பணியில் அலட்சியமாக இருந்ததாக மின் ஊழியர்களான கெர்வின் , சதீஷ் ஆகிய 2 பேர் மீது சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read Previous

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!!

Read Next

பாம்பு கடித்து மாணவன் உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular