சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் கணவன் மனைவி என இருவரும் கடன் தொல்லை தாங்காமல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்..!!
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நாத் கான் அருகே உள்ள மன்பூர் பகுதியை சேர்ந்தவர் மகரு ராம் மகன் மகேந்திர குமார் (21) இவர் பரமத்தியில் உள்ள பில்லூரில் ரிக் வண்டியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வெல்டிங் வைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாய் மின்சாரம் தாக்கி அவரை தூக்கி போட்டுள்ளது, உடனே மகேந்திர குமாரை மீட்டு அருகில் உள்ள கூடச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர், அப்போது அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சில மணி நேரத்திற்கு முன்பு இறந்துள்ளதாக தகவல் தெரிவித்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது..!!