
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் ஃப்ரிட்ஜை திறந்த போது மின்சாரம் தாக்கி ஐந்து வயது குழந்தை பலி.
திருவள்ளுர் மாவட்டம் அடுத்து ஆவடி பகுதியில் வசித்து வரும் கௌதம்-பிரியா அவர்களின் மகள் ரூபாவதி (5) வயது மதிக்கதக்க பெண் குழந்தை இன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது எதார்த்தமாக குளிர்சாதனப்பெட்டியை திறந்துள்ளார், உடனே மின்சாரம் தாக்கி அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார், அவரை ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பெண் குழந்தைக்கு பரிசோதனை வழங்கிய போது அந்த குழந்தை முன்னதாகவே இருந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர், இதனால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் கண்ணீரோடு கதறினார்கள்..!!