மின்சார கட்டணங்களில் அரசின் புதிய திட்டம் – முதல்வர் அறிவிப்பு..!!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மின்சார கட்டணங்களை செலுத்தாத நுகர்வோர்களுக்கு ஒரு முறை தீர்வு திட்டத்தை யோகி ஆதித்யநாத் அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

மின்கட்டணம்:

உத்தரபிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை நீட்டிக்க ஏராளமான புதிய திட்டங்களை அவர் அறிவித்து வருகிறார். இந்நிலையில் மாநிலத்தில் உபியில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மின் கட்டணங்களை வசூலிக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அதன் படி மின்சார கடன் செலுத்தாத பொதுமக்கள் மட்டுமல்லாது வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில்துறை நுகர்வோர் என அனைத்து தரப்பினருக்கும் சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையில் படி நவம்பர் 8ஆம் தேதி முதல் ஆண்டு இறுதி வரை மின்சார நுகர்வோருக்கான முறை தீர்வுத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை பயன்படுத்த மின்சார கடன் வைத்திருப்பவர்கள் எளிய தவணை முறையில் அதனை கட்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 12 தவணைகள் வரை நீட்டிக்கப்படும். அதேபோல கூடுதல் கட்டணங்கள் அனைத்து தள்ளுபடி செய்யப்படும்.

Read Previous

தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – அரசாணை வெளியீடு..!!

Read Next

தமிழகத்தில் ரேஷன் வழங்குவதில் புதிய மாற்றம் – அமைச்சர் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular