மின்விசிறி வயரில் கை பட்டு 7 மாத பெண் குழந்தை பலி..!!

திருவள்ளூர்: திருத்தணி செருக்கனூர் கிராமத்தில் எலி கடித்த மின் விசிறியின் வயரில், தூங்கிக் கொண்டிருந்த 7 மாத பெண் குழந்தை புரண்டு படுத்ததில், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இருளர் காலணியைச் சேர்ந்த சகாதேவன், மீனா தம்பதியின்
இரண்டாவது குழந்தை பேபி ஷாலினி. இவர்களது வீட்டின் டேபிள் மின் விசிறியின் வயரை எலி கடித்துள்ளது. அந்த வயரில் கை பட்டு குழந்தை துடித்துள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் சகாதேவனை அழைத்துக் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Read Previous

2022ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை வழங்கிய முதல்வர்..!!

Read Next

இந்திய கணக்கில் மேலும் ஒரு தங்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular