மின் கசிவால் சோகம்; பெண், 7 குழந்தைகள் உடல் கருகி பலி.!!

பாகிஸ்தானில் வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு குழந்தைகள் உட்பட ஒரு பெண் ஆகிய எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டிலுள்ள அபோபாப் மாவட்டம் பஹானி கிராமத்தில் உள்ள வீடு ஒன்று நேற்று தீப்பிடித்து பயங்கர விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த தீ விபத்தில் வீட்டுக்குள் இருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிக்கிக் கொண்டு உயிருக்காக போராடி உள்ளனர்.

அதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் ஏழு குழந்தைகள், ஒரு பெண் என்று எட்டு பேர் சடலமாய் மீட்கப்பட்டனர். மின்கசிவியின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

மைனர் சிறுமியுடன் 2 முறை ஓட்டம் பிடித்த இளைஞர்..!! 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த பெங்களூர் நீதிமன்றம்.!!

Read Next

அமலாக்கத்துறை இயக்குனருக்கு சம்மன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular